தமிழக கொரோனா நிவாரணம் ரூ.1000 – வீடு தேடி வழங்க அமைச்சர் உத்தரவு..!

0
500 rupees
500 rupees

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள 4 மாவட்டங்களில் கொரோனா நிவாரண தொகையான 1000 ரூபாயை மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார்.

முழு ஊரடங்கு நிவாரணம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்கும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 19ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஜூன் 30 வரை 12 நாட்கள் அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவு இம்முறை கடுமையாக இருக்கும் என அமைச்சர்கள் குழு தெரிவித்து உள்ளது. தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள 4 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Ration Shops
Ration Shops

ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் பெறாதவர்கள் வரும் 27ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள 4 மாவட்டங்களில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண உதவி அவரவர் வீட்டிற்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here