தமிழகத்தில் கொரோனாவை தடுக்க ரூ.9,000 கோடி வழங்குக – பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை..!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க 3000 கோடி ரூபாய் தேவை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வர் கோரிக்கை:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம், மஹாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில் கொரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில முதலமைச்சர்கள் சார்பில் அந்தந்த மாநிலங்களுக்கு கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியுதவிகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

PM Modi Conference
PM Modi Conference

தமிழகம் சார்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 3,000 கோடி ரூபாய் தேவை என பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ. 1,000 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார இழப்பை சரிசெய்ய ரூ. 9,000 கோடி உடனடியாக வழங்குமாறு கோரப்பட்டு உள்ளது. மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50% நிதியை உடனடியாக விடுவிக்குமாறு கோரப்பட்டு உள்ளது. மேலும் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தானியங்களை வழங்கவும் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here