ரயிலில் வித்அவுட் பயணிகளுக்கு நல்ல செய்தி – விரைவில் சட்ட திருத்தம்..!

0

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பல மாற்றங்களை கண்டு வருகிறது. மேலும் சிறுசிறு குற்றங்களுக்கும் அபராதம், சிறை அல்லது இரண்டும் என்ற தண்டனை நடைமுறையில் உள்ளது. இதில் சில மாற்றங்களை செய்துள்ளது

ராஜீவ் கவுபா

இந்தியாவை பொறுத்தவரை சிறு சிறு குற்றங்களுக்கு இது அதிகபட்ச தண்டனை என்ற கருத்து பல காலமாக நிலவி வருகிறது. இதனை சரி செய்யும் விதமாக அனைத்து அமைச்சகங்களுக்கும், அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

ராஜீவ் கவுபா
ராஜீவ் கவுபா

அதில் எந்தெந்த சிறு குற்றங்களுக்கு அபராதம் மட்டுமே விதித்தால் போதும் என்பதை பரிந்துரை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதில் சில பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதாவது ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது அபாய சங்கிலியை பிடித்து இழுப்பது பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவது உள்ளிட்ட 16 குற்றங்களை ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. இதனால் விரைவில் இந்த குற்றங்களுக்கு அபராதம் மட்டுமே விதித்தால் போதும் என்ற சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here