ஆண்களுக்கான முடி உதிர்வு பிரச்னையை முழுவதுமாக தடுக்க வேண்டுமா?? இதோ எளிய தீர்வு!!

0

முடி உதிர்வு பிரச்சனையால் மூன்றில் ஒரு சதவீதத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பெண்களை விட ஆண்களே அதிகம் முடி முதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் உணவு பற்றாக்குறை, மன அழுத்தம், மாசுபாடு, மரபியல் ரீதியிலான காரணங்களே ஆகும். ஆண்களுக்கு அதிகம் முடி உதிர்வு ஏற்பட அவர்கள் தொப்பியுடன் அலைவது, ஹெல்மெட் அணிவது, மது அருந்துவது போன்ற செயல்களே காரணம்.

மஜாஜ் செய்யுங்கள்:

சில ஆண்கள் தலைக்கு எண்ணெய் வைப்பதே இல்லை. மாடர்ன் என்ற பெயரில் தலைக்கு எண்ணெய் வைத்து அதனை பாதுகாக்க மறக்கிறார்கள். விடுமுறை நாட்களிலாவது, தலைக்கு எண்ணெய் தேய்த்து, ஒரு 20 நிமிடமாவது நன்றாக மஜாஜ் செய்யுங்கள். மஜாஜ் செய்ய ஆலிவ் ஆயிலை உபயோகித்தால் முடிகளுக்கு மிகவும் நல்லது. இது முடிக்கு போசாக்கு தருவதோடு, அதனை பாதுகாக்கவும் உதவுகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

வைட்டமின் ” E ” குறைவு :

வைட்டமின் E குறைபாட்டால் தான் பெரும்பாலும் முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வைட்டமின் E நிறைந்த உணவுகளை நம் அன்றாட வாழ்வில் எடுப்பதன் மூலம் இந்த பிரச்சனையை சரிசெய்யலாம். வைட்டமின் E முடிகளுக்கு ஊட்டம் அளிக்கிறது, வேர்பகுதிகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க செய்கிறது. வைட்டமின் அதிகம் காணப்படும் உணவுபொருளான வெங்காயம், கறிவேப்பிலை சோயா போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் நாம் முடி உதிர்தலை தடுக்கலாம். மேலும், விட்டமின் E மாத்திரைகளை போன்றவற்றை தேங்காய் எண்ணெயோடு சேர்த்து தினமும் தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தல் சரியாகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குளியல் முறை :

பெரும்பாலும் நீங்கள் தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதை விட சிகைக்காயை பயன்படுத்துவது நல்லது. தினமும் தலைக்கு குளித்தால் பொடுகு போன்ற பிரச்சனைகள் சரியாகி, தலை சுத்தமாக இருக்கும். குறைவான முடி என்பதால் சிரமம் பெரிதளவில் இல்லை. குளிர்ந்த நீரில் தலை அலசுவது நல்லது. குளியலுக்கு பின் கனமான துணியால் தலையை துவட்ட வேண்டாம். ஈரத்தில் முடி மிக பலவீனமாக இருக்கும். அப்போது துணியால் துவட்டினால் உதிர வாய்ப்பு அதிகம் உள்ளது. எக்காரணங்கொண்டும் ஈரத்தலையில் சீப்பு பயன்படுத்துவதை அறவே தவிர்த்துடுங்கள். அவசரமெனில், விரல்களால் தலையை கோதி முடிகளை ஒழுங்குபடுத்துங்கள் , இல்லையேல் பெரிய பல் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள்.

முடி உதிர்வை தடுக்க :

மன அழுத்தமும் முடி உதிர்வுக்கு காரணம் தான். எனவே முடிந்த வரை தியானத்தில் ஈடுபடுங்கள். ஆல்ஹகாலை அறவே தவிருங்கள். விடுமுறை நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது, மஜாஜ் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பெண்களை போலவே ஆண்களும் முடிக்கு சற்று நேரம் ஒதுக்குங்கள். வாரம் ஒருமுறை வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து, அதில் 2 விட்டமின் E மாத்திரையை சேர்த்து, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்துவிட்டு 30 நிமிடம் கழித்து குளிக்க செல்லுங்கள். இதனால் முடிக்கு போசாக்கு அதிகரிப்பதோடு, முடியின் பலமும் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here