டிசம்பர் 4 பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் – கொரோனா தடுப்பூசி குறித்து விவாதம்??

0
narendra modi
narendra modi

கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வரும் 4 ஆம் தேதி நடக்கவிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல்:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் அஹமதாபாத் அருகே ஜைகோவ்-டி, புனேவில் உள்ள கோவிஷீல்டு, ஐதராபாத்தில் கோவாக்சின் ஆகிய மூன்று விதமான தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அனைத்து பரிசோதனைகளும் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இந்த பரிசோதனை கூடங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தடுப்பு மருந்தின் வீரியம், செயல்பாடுகள் மற்றும் அதன் உற்பத்தி, மேம்பாடு குறித்து கேட்டறிந்தார். அதன் பின்பு, கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் மூன்று நிறுவனங்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

இந்நிலையில், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கவுள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றியும், விவசாயிகளின் போராட்டம் பற்றி மற்றும் பிற விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here