காவல்துறை SI போட்டி தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – சீமான் வலியுறுத்தல்!!

0
reservation to be followed in sub inspector exams
reservation to be followed in sub inspector exams

காவல்துறை துணை ஆய்வாளருக்கான போட்டி தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் “நாம் தமிழர்” கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

காவல்துறை தேர்வு:

தமிழகத்தில் காவல்துறையில் உள்ள துணை ஆய்வாளருக்கான 969 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகள் உடற்தகுதி தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என்று மூன்று நிலைகளாக நடைபெற்றது. உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு நேர்முக தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. இந்த தேர்வுகளின் முடிவுகளில் தமிழ் வழியில் பயின்றவருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இது குறித்து தேர்வர்கள் கேள்வி எழுப்பிய போது தேர்வாணையம் இறுதி முடிவுகளின் போது தான் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு தற்போது “நாம் தமிழர்” கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கையினை வெளியிட்டு உள்ளார். அதில், “துணை ஆய்வாளருக்கான தேர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில் தேர்வு முடிவுகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்காமல் முடிவுகளை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு நிலையிலும் இட ஒதுக்கீடு வழங்கினால் தான் தமிழ் வழியில் பயின்றவர்கள் முழுமையாக பயன் அடைவர். வகுப்புவாரியான இடஒதுக்கீட்டினை மட்டும் ஒவ்வொரு நிலையின் போதும் பின்பற்றுகின்றனர். முதல் நிலையிலேயே இடஒதுக்கீட்டினை பின்பற்றவில்லை என்றால் ஆரம்ப நிலையிலேயே தமிழ் வழியில் பயின்றவர்கள் புறக்கணிக்கப்படுவர்.

சவரனுக்கு ரூ.440 குறைந்த தங்கத்தின் விலை – இல்லத்தரசிகள் செம ஹாப்பி!!

வன பாதுகாப்பாளர் தேர்வின் போது எப்படி இடஒதுக்கீட்டினை முறையாக பின்பற்றினரோ அதே போல் இந்த தேர்வுகளுக்கு பின்பற்ற வேண்டும். அதுவரை தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நேர்முக தேர்வுகளுக்கான தேதிகளை ஒத்தி வைக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடஒதுக்கீட்டினை முறையாக வழங்க வேண்டுகிறேன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here