அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

0

நாட்டில் உள்ள 25 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மார்ச் & ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்து வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணி பற்றி கேட்டபோது இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அச்சம்:

நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா நோய் பரவி வருகின்றது. இதன் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது. இப்படி இருக்க இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. “கோவாக்ஸின்” தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டெல்லியில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். “டெல்லி சலோ” என்று பெயர் வைத்துள்ள இந்த பேரணியில் அரியானா, பஞ்சாப் விவசாயிகள் நடந்து சென்று தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில் “முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மக்கள் தங்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும்”

தமிழ் பிளாஸ்டராக திரும்பி வந்த தமிழ் ராக்கர்ஸ் – பரிதவிப்பில் பட தயாரிப்பாளர்கள்!!

“கொரோனாவிற்கான தடுப்பூசிகள் தற்போது தயாராகி வருகின்றது. அடுத்த ஆண்டின் 3 முதல் 4 மாதங்களில் தடுப்பூசிகள் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும். மிக விரைவாக மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அடுத்த ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாட்டில் உள்ள 25 கோடி மக்களுக்கு தடுப்பூசி கிடைத்து விடும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here