தனது கணவருடன் ஜோடியாக பார்ட்டி வைத்த காஜல் அகர்வால் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!!

0

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வாலுக்கு தற்போது திருமணம் ஆன நிலையில் அவர்கள் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது ஒரு மாதம் முடிந்த இவர்களின் திருமணத்தை ஒட்டி ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வால்

தமிழில் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் சின்ன படங்களில் நடித்திருந்தாலும் மகதீரா படத்திற்கு பிறகு அவருக்கு செம லக் அடித்தது என்றே சொல்லலாம்.

kajal agarwal

தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் காஜல். தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். மெர்சல், ஜில்லா போன்ற படங்கள் தமிழில் அவருக்கு ஹிட் கொடுத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு பல படங்களில் நடித்த காஜலுக்கு படவாய்ப்புகள் குறைந்தன. இவருக்கு எப்பொழுது திருமணம் என்று பலரும் காத்திருந்த நிலையில் அவருக்கு தொழிலதிபரான கௌதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடந்தேறியது. அவரது திருமண புகைப்படங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படமும் வெளியானது. இதனால் இவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தும் வந்தனர். காஜலிடம் அவரது கணவரை பற்றி கேட்டபோது அவர் தன்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வதாக கூறினார். மேலும் அவர் காஜலின் தந்தையிடம் அனுமதி கேட்டு தான் காஜலிடம் தன் காதலை தெரிவித்தாராம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் திருமணம் ஆனவுடன் தனியாக ஒரு வீட்டிற்கு சென்றது புது அனுபவமாக இருப்பதாகவும் கூறினார். மேலும் கௌதம் கிச்சுலுக்கு மொபைல் என்றால் மிகவும் பிடிக்குமாம். அது தான் அவரது முதல் மனைவி என்றும் கூறி இருந்தார். மேலும் அவர்களது 3 நாள் ஹனிமூனுக்கு 42 லட்சம் செலவானது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய தான் செய்தது.

தற்போது அவர்களின் திருமணம் நடந்து ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் திருமணத்தில் எடுத்த ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால். அந்த புகைபடம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here