தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் உருளைக் கிழங்கு – ஈசியான டிப்ஸ் இதோ!!

0

இன்றைய நவீன உலகத்தில் அனைத்துமே நவீனமாக மாறி விட்டாலும்,பெண்களுக்கு தலைமுடியின் மீது உள்ள ஆர்வம் மட்டும் என்றுமே குறைவதில்லை. பெண்கள் அனைவருமே தங்கள் தலைமுடி அழகாக,அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று எதை செய்ய சொன்னாலும் செய்வார்கள். மேலும் இந்த ஆசையினால் அவர்கள் நிறைய கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ மற்றும் மற்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் தலைமுடி அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதை சரி செய்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும், நமது வீட்டின் சமையல் அறையில் இருக்கும் எளிய ஒரு பொருளை வைத்து நமது தலைமுடி பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றால் அது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் தானே…அப்படியான ஒரு பொருள் தான் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை பயன்படுத்தி நமது தலைமுடி பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உருளைக்கிழங்கை பயன்படுத்துவதன் நன்மைகள்:

உருளைக்கிழங்கின் சாறு முடி வளர்ச்சியை தூண்டுவதால், தலையின் வேர்ப்பகுதியில் அதன் சாறை தடவி வந்தால் தலைமுடுயின் வளர்ச்சி தூண்டப்படும். கூந்தலில் இருக்கும் பொடுகுப் பிரச்சனைக்கு உருளைக்கிழங்கின் சாறை எடுத்து தலையின் ஸ்கேல்ப் பகுதியில் தொடர்ந்து மசாஜ் செய்துவந்தால் கூந்தல் வளர்ச்சியடையும்.

அண்ணாத்த பட ஷூட்டிங்கில் இணைந்த மீனா, குஷ்பூ!!

தலையில் அதிகப்படியான எண்ணெய் இருந்தாலும் தலைமுடி உடையும். உருளைக்கிழங்கில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் ஸ்கேல்ப்பிற்கு மிகவும் நல்லது. சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு உதவும் முக்கியமான கொலாஜென் உருளைக்கிழங்கில் அதிகமாகவே உள்ளது.

உருளைக்கிழங்கின் சாறுடன் தேன் மற்றும் பால் சேர்த்து தலையில் தடவி வந்தால் தலைமுடி மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறிவிடும். உருளைக்கிழங்கின் சாறுடன் மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தடவி வந்தால் தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டமானது அதிகரித்து தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கின் சாறுடன் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவி வந்தால் பொடுகுப் பிரச்சனை நீங்கி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here