‘ஒரு வினாடிக்கு, ஒரு சிக்கன் பிரியாணி’ – இந்தியாவில் களைகட்டிய விற்பனை!! ஸ்விகி ரிப்போர்ட்!!

0

இந்தியாவில் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக சிக்கன் பிரியாணி இருந்துள்ளது என்று பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது. அதே போல் இந்த ஆண்டில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்விகியின் புதிய வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடித்தமான உணவு:

இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக அவர்கள் உண்ணும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். ஒரு உணவினை மிக நேர்த்தியாகவும் பிடித்த வகையில் சாப்பிடுவதில் இந்தியர்கள் கில்லாடிகள். அந்த வகையில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையினருக்கு மிகவும் பிடித்த உணவாக “சிக்கன் பிரியாணி” உள்ளது. காரணம், ஒரு வினாடிக்கு ஒருவர் இந்தியாவில் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்து உட்கொள்கிறார் என்று பிரபல நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஸ்விக்கி ஆப் வழியாக ஒருவர் வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்யும் போது 6 பேர் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிடுவதாக கூறுகிறது இந்த ஆய்வு. இதன் மூலமாக இந்தியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக சிக்கன் பிரியாணி உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் சிக்கன் பிரியாணி காரணமாக ஸ்விகியில் 3 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக அதிகரித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்தின் போது அனைவரும் வீட்டில் இருந்தபடி காபி மற்றும் டீயினை அதிகமாக ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் உருளைக் கிழங்கு!!

2 லட்சத்திற்கும் அதிகமானோர் பானிபூரி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அதே போல் கொரோனா பரவலை கருத்தில் கொன்டு ஸ்விக்கி உருவாக்கிய “ஸ்விக்கி ஹெல்த்ஹப்” என்ற ஆப் மூலமாக டெல்லி மற்றும் பெங்களூரில் வசிக்கும் மக்கள் அதிகமாக சத்தான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அதே போல் மளிகை சாமான்களை விற்கும் “ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்” மூலமாக இந்த ஆண்டு மட்டும் 75 ஆயிரம் கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here