குளிர்காலத்தில் முடி உதிர்வை தடுப்பது எப்படி?? வீட்டிலேயே செய்யும் எளிய முறைகள் இதோ!!

0
hair growth
hair growth

குளிர்காலம் வந்தாலே நமது தலைமுடி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. குளிர்காலத்துல ஏற்படுற சரும வறட்சிதான் இதற்க்கு முக்கிய காரணமா இருக்கு. குளிர்காலத்தில் நாம் சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் நமது தோலிற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்காமல் போகிறது. இதனாலேயே தலையில் ஸ்கேல்ப் பகுதி வறண்டு முடிகொட்டுதல் மற்றும் வறட்சியினால் ஏற்படும் அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாம் வாழும் பரபரப்பான வாழ்க்கையில் பலருக்கும் தலைமுடியை பராமரிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களை ஒப்பிடுகையில் நாம் நமது உடலை முறையாக பராமரித்தாலே எந்த பிரச்சனையும் நம்மை அண்டாது.

வெயில்காலங்களில் நாம் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதினால் நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் வியர்வையின் மூலமாக வெளியேறி விடும். ஆனால் குளிர் காலத்தில் நமக்கு வியர்ப்பது இல்லை. எனவே நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற முடியாமல் நமது உடலை பாதிக்கும். இதன் ஒரு பகுதியாக தான் நமக்கு குளிர்காலத்தில் அதிக அளவில் தலைமுடி கொட்டுகிறது. இதை சரி செய்வதாக நினைத்து இன்றைய தலைமுறையினர் கடைகளில் விற்கும் கண்ட கண்ட ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தி இருக்கும் தலைமுடியையும் இன்னும் கெடுத்துக் கொள்கின்றனர்.

‘நான் மூணு இல்ல, 30 கல்யாணம் கூட பண்ணிக்குவேன்’ – புதிய சர்ச்சையை கிளப்பும் வனிதா!!

இயற்கையான முறையில் கூந்தலை பராமரித்தால் தான் நமது கூந்தலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். தலைமுடி வறட்சி ஏற்படுவதினால் மட்டும் தான் பொடுகுத்தொல்லை, அரிப்பு போன்றவை உருவாகிறது. நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நமது கூந்தலை எப்படி ஆரோக்கியமாக பராமரிக்க முடியும் என்றும், முடிகொட்டும் பிரச்சனையை எவ்வாறு சரிசெய்யலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பூசணிவிதை:

100g அளவிற்கு பூசணிவிதைகளை பொடிசெய்து ,அதில் 100ml கடுகு எண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும். அதில் 100g அளவிற்கு ஆம்லா சேர்த்து அறை வெப்பநிலையில் வைத்து குளிரவிட வேண்டும். இந்த எண்ணையை தலையின் ஸ்கேல்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

தயிர்:

சிறிது பூசணிப்பூவின் விதைகளுடன் வெந்தயம் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இதனுடன் தயிர் சேர்த்து தலையின் ஸ்கேல்ப்பில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து அலசவேண்டும். இத்தனைநாள் பொடுகுத்தொல்லை நீங்கி, தலை அரிப்பு பிரச்சனையும் ஏற்படாது.

தேங்காய் பால்:

முதலில் தேங்காயை நன்கு அரைத்து அதில் இருந்து பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காய்ப்பாலை தலையின் வேர்க்கால்களில் படும்படி, 2மணி நேரம் வரை வைத்து அலச வேண்டும். தேங்காய்ப்பாலில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் சில கொழுப்புச்சத்துக்கள் தலைமுடிக்கு ஊட்டம் அளிக்கிறது. இதனால் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கிறது.

வெங்காய சாறு:

வெங்காயத்தின் சாறு தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வெங்காயத்தின் சாறை தலை முழுவதும் படும் படி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஷாம்பு அல்லது சீகைக்காய் கொண்டு அலச வேண்டும். இது முடி உதிர்வை தடுத்து, வளர்ச்சியை தூண்டுகிறது.

முட்டை:

முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது ஆலிவ் எண்ணையை கலந்து தலையின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். பிறகு வெது வெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும். முட்டையில் இருக்கும் கந்தகம், துத்தநாகம், இரும்பு சத்து, அயோடின் சாது போன்றவை தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.

வெந்தயம்:

அதிக உடல் சூட்டின் காரணமாக முடி கொட்டும் நபர்கள் வெந்தயத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். வெந்தயத்தை ஊற வைத்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் ஊற வைத்து அலச வேண்டும். இந்த முறையில் தலைமுடியின் இயற்கையான நிறம் பாதுகாக்கப்படுகிறது.

நெல்லிக்காய்:

முதலில் 2 டீஸ்பூன் நெல்லித் தூள், 2 டீஸ்பூன் சீகைக்காய் தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும். அதனை உச்சந்தலையில் தடவி 60 நிமிடங்களுக்கு பிறகு குளிக்க வேண்டும். முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைக்க இது உதவும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி முடி நரைப்பதை குறைக்கும். மேலும் பொடுகை எதிராக போராடும் திறனும் இதில் உள்ளது.

கற்றாழை:

கற்றாழை ஜெல் மற்றும் வெந்தயம் இரண்டையும் பேஸ்ட் போல் அரைத்து 30 நிமிடங்கள் தலையில் தேய்த்து ஊற வைத்த பின்பு அலச வேண்டும். இதில் உள்ள விட்டமின்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து முடிஉதிர்வை தடுக்கிறது. மேலும் உடலின் குளிர்ச்சியை அதிகரிக்கிறது.

இந்த எளிய முறைகளை வீட்டிலேயே செய்து உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளுங்கள். மேலும் தலைமுடி பிரச்சனைகளை தவிர்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here