‘இந்தியாவின் செஸ் நாயகன்’ – விஸ்வநாதன் ஆனந்த் பிறந்ததினம் இன்று!!

0

இந்தியாவின் செஸ் நாயகன் என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்த் தன்னுடைய 51-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் செஸ் நாயகன்:

விஸ்வநாதன் ஆனந்த் 1969-ஆம் ஆண்டு டிசம்பர் 11-இல் மயிலாடுதுறையில் பிறந்தார். ஆனந்தின் தாயார் சுசீலா செஸ் வீராங்கனை. அதனால்தான் ஆனந்துக்கும் செஸ் விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. ஆனந்த் தன்னுடைய 6 வயதிலிருந்தே செஸ் விளையாடத் தொடங்கினார். செஸ் போட்டிகளில் தனது 13 வயதிலிருந்து பங்கேற்று விளையாடி வரும் விஸ்வநாதன் ஆனந்த், இதுவரையில் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பன்னாட்டு செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் 2789 புள்ளிகள் பெற்று தற்போது நான்காம் இடத்தில் ஆனந்த் நீடித்து வருகிறார். தன்னுடைய 15 வயதில் (1984-ம் ஆண்டு) அனைத்துலக மாஸ்டர் பட்டதை வென்ற இவர், இந்தியாவின் ‘செஸ் நாயகனாக’ திகழ்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை – விராட் கோஹ்லி முதலிடம்!!

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற ஆனந்த் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் செஸ் அகாடமியை துவங்கவுள்ளார். இதற்கு வெஸ்டபிரிட்ஜ்-ஆனந்த் அகாடமி என பெயர் வைக்கப்படவுள்ளது. இந்தியாவில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்படும். இதனால் சர்வதேச அளவில் செஸ் சாதனையாளர்களை உருவாக்க முடியும் என அறிவித்தார். இவ்வாறாக சாதனை படைத்தது வரும் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறந்தநாள் இன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here