‘ஹேமந்த் கெட்டவன் என தெரிந்தும், ஏன் சித்ரா அவரை திருமணம் செய்ய வேண்டும்?’ பயில்வான் கேள்வி!!

0
எவ்ளோ பட்டாலும் திருந்தாத பயில்வான் ரங்கநாதன்., இருக்கிறது போதாதுன்னு இந்த பிரச்சனை வேற!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பலரையும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் சித்ரா மரணத்தில் இருக்கும் மர்மத்தை பற்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. இவரது மரணத்தை யாராலும் இதுவரை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவர் தற்கொலைக்கு ஹேமந்த் தான் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளரான பயில்வான் சித்ரா இறப்பை பற்றி பல கேள்விகளை தொடுத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

chithra and her future husband

அதாவது சித்ராவின் அப்பாவும் போலீஸ், சித்ராவும் சைக்காலஜி படித்தவர் அப்படி இருக்க தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவர் கோழையும் கிடையாது. இந்நிலையில் இது எப்படி நடந்திருக்கும் என்று கூறினார். மேலும் ஹேமந்த் அவர்களுக்கும் சித்ராவிற்கு ஏற்கனவே பதிவு திருமணம் நடந்துள்ளது. அப்படி இருக்க இருவரும் கணவன் மனைவி தான்.

‘நான் மூணு இல்ல, 30 கல்யாணம் கூட பண்ணிக்குவேன்’ – புதிய சர்ச்சையை கிளப்பும் வனிதா!!

ஆனால் சித்ரா குளிக்க செல்வதாக கூறியதால் நான் வெளியே சென்றேன் என்பது நம்பும்படியாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கணவன் மனைவி உறவில் இருக்கும்போது எப்படி அவர் குளிக்கும்போது இவர் வெளியே சென்றிருப்பார். அப்படி சண்டையில் வெளியேறினார் என்றே வைத்துக் கொள்ளலாம். வேகமாக கதவை மூடும்போது இவர் ஏன் கதவை தட்டவில்லை.

chithra

அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவியை செக் செய்யும்போது தான் உண்மைகள் அனைத்தும் வெளியே வரும் என்றும் கூறியுள்ளார். மேலும் சித்ராவின் அப்பாவிற்கு சித்ரா நடிக்க சென்றபோது அதனை தடுக்க தான் செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இவர்களின் பதிவு திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும். அப்படி மறைப்பதற்கு என்ன இருக்கிறது.

இருவரில் யார் இதனை மறக்க சொல்லி இருபார்கள். ஹேமந்த் மிகவும் கெட்டவன் என்று பலர் சொல்லியும் ஏன் சித்ரா அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு பல கேள்விகளை தொடுத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இவர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் நியாயமாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here