ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை – விராட் கோஹ்லி முதலிடம்!!

0

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி ஒவ்வொரு தரவரிசை பட்டியலாக வெளியிட்டு வருகின்றது. தற்போது ஒரு நாள் தொடரின் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

தரவரிசை பட்டியல் வெளியீடு:

சர்வதேச கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டு நிறைவு பெற உள்ளதால் ஒவ்வொரு பிரிவிலும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. இன்று ஒரு நாள் தொடரில் சிறந்த பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 870 புள்ளிகளுடன் பிடித்து அசத்தியுள்ளார். நடந்து முடித்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அவர் 2 அரைசதங்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தரவரிசை பட்டியலில் முதல் முறையாக இந்திய பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா முதல் 50 இடங்களில் இடம் பெற்றுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்து முடிந்த போட்டிகளில் நூல் இலையில் சதம் அடிக்காமல் இருந்தார். முதல் போட்டியில் 90 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாவது போட்டியில் 92 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள கிரிக்கெட் தொடர் அட்டவணை!!

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் ரோஹித் சர்மா 842 புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ரோஹித் சர்மாவை விட 5 புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளார். ஒருநாள் பவுலர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் பும்ரா தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நிலைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் நியூசிஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் போல்ட் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளா் முஜீப் உா் ரஹ்மான் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here