2020 இன் கடைசி சூரியகிரகணம் – இந்தியாவில் பார்க்க முடியுமா??

0

இந்த வருடத்தின் கடைசி சூரியகிரகணம் டிசம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 5 மணி நேரம் நடக்கும் இந்தக்கிரகண நிகழ்வை இந்தியாவில் பார்க்க முடியாது. சூரியகிரகணம் ஜோதிடத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதால் நமது ராசிபலன்களையும் பாதிக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

சூரிய கிரகணம்

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வை சூரியகிரகணம் என்கிறோம். 3 வகையான சூரியகிரகணங்கள் உண்டு, முழு சூரியகிரகணம், பகுதி சூரியகிரகணம், வளைய சூரியகிரகணம். 2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று நிகழ்ந்தது. டிசம்பர் 14ம் தேதி நிகழகூடிய இந்த சூரியகிரகணம் சுமார் 5 மணிநேரம் நீடிக்கும் என கூறுகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டிசம்பர் 14 அன்று 2020 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் தென் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் காணப்படும். சூரிய கிரகணம் இந்திய நேரப்படி, டிசம்பர் 14 இரவு 7:03 மணி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவு 12:23 மணி வரை நிகழும். இந்த முழு சூரிய கிரகணம் தென் அமெரிக்காவில் பகல் 1 மணி 33 நிமிடம் 55 நொடிக்கு தொடங்கி மாலை 4 மணி 13 நிமிடம் 28 நொடி வரை நீடிக்கிறது. இந்திய நேரப்படி இரவு 09 மணி 43 நிமிடம் 28 நொடியில் இந்த முழு சூரியகிரகணம் உச்சத்தில் இருக்கும்.

696824582

சூரிய கிரகணத்தின் போது மக்கள் சில விதிகளை பின்பற்றுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டாம் ஏனெனில், சூரிய கிரகணத்தின் நேரத்தில் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு வரக்கூடும். மேலும் இந்த நேரத்தில் மக்கள் முக்கியமான காரியங்கள் எதுவும் செய்யமாட்டார்கள். குறிப்பாக சமையல் செய்யமாட்டார்கள், சாப்பிட மாட்டார்கள், குளிக்க மாட்டார்கள்.

தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பேருந்துகள்!!

சூரிய கிரணத்தின் போது இறை வழிபாடு செய்வது நல்லது.. சூரியன் – பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைவத்தால் நம் எண்ணங்கள், கருத்துக்கள் ஒன்று கூடும் அதனால் இறைவனை வழிபடுவது நல்லது. ஸ்ரீ ராமஜெயம், ஜெய் ஸ்ரீராம், ஓம் நமசிவாய, காயத்திரி மந்திரங்கள் என எளிமையான மந்திரங்களை உச்சரித்து வந்தாலே போதும் நாம் இறைவனின் அருளைப்பெறலாம்.

இந்த முழுசூரியகிரகணம் தென்அமெரிக்காவில் பகல் நேரத்தில் நிகழ்வதால் அங்குள்ள மக்கள் சூரிய கிரகணத்தை பார்க்கமுடியும். இந்தியாவில் இரவு நேரத்தில் நிகழ்வதால் நம்மால் அந்த முழுசூரியகிரகணத்தை பார்க்க இயலாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here