‘நான் மூணு இல்ல, 30 கல்யாணம் கூட பண்ணிக்குவேன்’ – புதிய சர்ச்சையை கிளப்பும் வனிதா!!

0

சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்புக்கு தற்போது பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வனிதாவும் சித்ராவின் இறப்பை பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வனிதா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா பிரபல நட்சத்திர ஹோட்டலில் தூக்கு மாட்டி இறந்தது பலரையும் வேதனையாக்கியுள்ளது என்றே சொல்லலாம். ஏன் இப்படி ஒரு முடிவை சித்ரா எடுத்தார் என பலரும் கண்கலங்கி வருகின்றனர். இந்நிலையில் சித்ரா மன அழுத்தத்திற்கு ஆளானதற்கு அவரது அம்மாவும், ஹேமந்தும் தான் காரணம் என போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

chithra
chithra

இந்நிலையில் வனிதா சித்ராவின் இறப்பை பற்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது வனிதா சித்ராவை ஒரு தடவை மட்டும் தான் நேரில் பார்த்துள்ளார். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது பேசியது தான். அவரது கள்ளங்கபடம் இல்லாத அந்த சிரிப்பு வெகுளியான பேச்சு இன்னும் தன் மனதில் இருப்பதாக கூறியுள்ளார் வனிதா.

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை – விராட் கோஹ்லி முதலிடம்!!

மேலும் வனிதா சித்ராவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். என்ன பிரச்சனையாக இருந்தாலும் தற்கொலை தீர்வு கிடையாது என்றும் சொல்லிவிட்டு சென்றார். அவரது மரணம் இதுவரையிலும் நம்ப முடியாத ஒன்றாக உள்ளது என கூறியுள்ளார் வனிதா. எனக்கு நடந்த பிரச்சனைக்கு என்ன சொல்வது. வனிதா மூன்றாவது திருமணம் செய்துகொண்டார் என செய்தி முழுவதும் பரவி வருகிறது.

நான் மூணு கல்யாணம் இல்ல 30 கல்யாணம் கூட பண்ணிக்குவேன். நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. என் குழந்தை, மனசாட்சிக்கு பயந்தா போதும். எந்த பிரச்சனை நாளும் நின்னு போராடனும். தற்கொலை தீர்வு கிடையாது என்று கூறியுள்ளார்.

ஒரு உறவை நம்ம தவறை தேர்ந்தெடுத்துட்டா அதுல இருந்து வெளிய வர தான்பாக்கணும். இது சமுதாயத்துல நிறைய இடத்துல நடக்குது. இது ரொம்ப தப்பான விஷயம் என்றும் கூறியுள்ளார் வனிதா. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here