சூர்யாவின் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் இருந்து விலகிய பிரபலம்….,வெளியான ஷாக்கிங் தகவல்….,

0
சூர்யாவின் 'வாடிவாசல்' திரைப்படத்தில் இருந்து விலகிய பிரபலம்....,வெளியான ஷாக்கிங் தகவல்....,
சூர்யாவின் 'வாடிவாசல்' திரைப்படத்தில் இருந்து விலகிய பிரபலம்....,வெளியான ஷாக்கிங் தகவல்....,

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’. நடிகர் சூரியை வைத்து ‘விடுதலை’ என்ற மாஸ் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு வெயிட்டான கதைக்களத்தில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்புகள் கடந்த ஆண்டு வெளியானது.

இந்த படமும் ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ‘வாடிவாசல்’ திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

விக்ரமின் ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவு…., நடிகை பார்வதி கொடுத்த அப்டேட்…,

மற்றபடி இந்த திரைப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகளின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் தற்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here