Saturday, May 4, 2024

மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் சான்றிதழ் – மாணவி மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதிவு!!

Must Read

தமிழகத்தில் நடைபெற்று வரும் மருத்துவ கலந்தாய்வில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் போலி மதிப்பெண் சான்றிதலை சமர்பித்ததால், மாணவி மற்றும் அவரது தந்தையின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ கலந்தாய்வு:

தமிழகத்தில் தற்போது மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றது. இதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்று வருகின்றனர். ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் என்டிஏ முகமை வழங்கிய நீட் மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்தார். நீட் தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இதனை தான் நகல் எடுத்து கலந்தாய்வின் போது ஒப்படைப்பர். ஆனாலும், என்டிஏ முகமை வழங்கிய மதிப்பெண் சான்றிதழும் மாணவர்கள் கொண்டு வரும் சான்றிதழ்களும் ஒன்றா? என்று சரி பார்க்க கலந்தாய்வில் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர்கள் மாணவியின் சான்றிதலை என்டிஏ ஆன்லைன் மதிப்பெண் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் இரண்டு சான்றிதழ்களுக்கும் பெரும் அளவு வித்தியாசம் கண்டறியப்பட்டது. மாணவி அளித்த சான்றிதழில் அவரது மதிப்பெண் 610 என்று இருந்துள்ளது. அதே சமயம் என்டிஏ அளித்துள்ள சான்றிதழில் அவருக்கு 25 மதிப்பெண்கள் மட்டுமே இருந்துள்ளது.

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – இன்று முதல் ஆர்.டி.ஓ விசாரணை தொடக்கம்!!

இதனால் குழப்பம் அடைந்த குழுவினர் மாணவி மற்றும் அவரது தந்தையிடம் விசாரித்தனர். அவர்கள் இருவரும் அது என்டிஏ வழங்கிய சான்றிதழ்கள் தான் கூறியுள்ளனர். இரு சான்றிதழ்களில் பெரும் அளவு வித்தியாசம் இருந்ததால் குழுவினர் மாணவி அளித்துள்ள சான்றிதழ் போலியாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, மாணவி மற்றும் அவரது தந்தையின் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அவரது தந்தை பல் மருத்துவர் என்று தெரிய வந்துள்ளது. போலீசார் மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு., நாளை (மே 5) தொடக்கம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-25ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -