கோவில் புனரமைப்பு பணியில் கிடைத்த தங்கப்புதையலை அள்ளிச்சென்ற மக்கள் – அதிர்ச்சியில் வருவாய்த்துறை!!

0

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் பகுத்தியில் உள்ள கோவில் ஒன்றில் கோவில் சீரமைக்கும் பனி நடைபெரும் போது 565கி எடையுடைய தங்க புதையல் கிடைத்தது. வருவாய்த்துறையினர் வரும் முன் மக்கள் அதில் பாதியை அள்ளிசென்று விட்டனர். அதிகாரிகளிடம் அந்த தங்க புதையலை ஒப்படைக்க மறுத்தனர். அந்த புதையலுக்க ஒருவர் சாமீ ஆடியுள்ளார்.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் குழம்பேஸ்வரர்

கோவில்களின் நகரமாம் காஞ்சிபுரம் மாவட்டம். அங்கு சுற்றி பார்க்கமுடியாத வண்ணம் நிறைய கோவில்கள் உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களும் கல்வெட்டுகளும் உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டான உத்திரமேரூர் கல்வெட்டு விளங்குகிறது. உத்திரமேரூர் பகுதியில் உள்ள கோவில்கள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் அவற்றை சீர்செய்யும் நோக்கோடு அப்பகுதி மக்கள் அரசுக்கு தெரிவிக்காமல் தாங்களாகவே சீர்செய்ய தொடங்கினர். அங்குள்ள குழம்பேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் ஆரம்பித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவ்வாறு அவர்கள் பணிகளை மேற்கொண்ட போது கோவிலின் கருவறைக்கு ஏறி செல்லும் படிக்கட்டுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டினார்கள். அப்போது ஒரு துணியால் சுற்றப்பட்ட பேட்டி ஒன்று இருப்பதை பார்த்து அதை எடுத்து திறந்து பார்த்தார்கள். அதில் தங்கக் காசுகள், தங்க ஆபரணங்கள், தங்கத்தால் ஆன மணிகள், தங்க தகடுகள் ஆகியவை இருந்தன. இதனைக் கண்டு பொதுமக்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். இதுகுறித்து திருப்பணிக் குழுவினரிடம் அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் எடை போட்டு பார்த்தபோது 565 கிராம் அளவுக்கு தங்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவற்றில் சில நகைகளை பொதுமக்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும், மேலும் கோயிலின் அடியில் மேலும் புதையல் இருக்கக் கூடும் என்றும் சந்தேகித்த மக்கள் ஒவ்வொரு பகுதியாக இடித்து தள்ளியும் இருக்கின்றனர்.

மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் சான்றிதழ் – மாணவி மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதிவு!!

புதையல் கிடைத்ததை அறிந்த வருவாய் துறையினர் புதையலை கைப்பற்ற சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்குள்ள மக்கள் புதையல் அங்கு வாழ்ந்த இளவரசி உடையது இதை தரமாட்டோம் என புதையலை தர மறுத்து வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் அங்கு சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பெண் ஒருவர் சாமியாடினார். அப்போது அவர், “இது இளவரசியின் நகை. கோயிலுக்கு கொடுத்த இந்த நகையை கோயிலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார். அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களில் சிலர், “சாமியே கூறிவிட்டது; இதை கோயிலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறினர்.

வருவாய் துறையினர், “2 மணி நேரத்துக்குள் புதையலை ஒப்படைக்காவிட்டால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தனர். அதன் பின், திருக்கோவில் குழுவினர் கலந்து ஆலோசித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, புதையலை ஒப்படைப்பதாகவும், கோவில் கட்டுமானப்பணிக்கு அரசு உதவ வேண்டும் என கூறி, புதையலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், கோயிலில் இருந்த அம்பாள் தெய்வ சிலைகள் காணாமல் போயிருப்பதாக ஊர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

16ஆம் நூற்றாண்டில் அந்நியர்களின் படையெடுப்பு காரணமாக சாமி அலங்காரத்திற்கு உருவாக்கப்பட்ட நகைகளை பாதுகாப்பாக வைக்க இப்படி படிக்கட்டுகள், கோயிலுக்கு அடியில் புதைத்து வைத்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. எனவே, மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கோயில்களை புனரமைக்கும்போது அவற்றை வருவாய் துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் கண்காணிக்க வேண்டும். கோயில்கள் இடிக்கப்படும்போது கிடைக்கும் அரிய பொருட்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here