Tuesday, April 23, 2024

தடாலடியாக குறைந்த தங்க விலை – நகை வாங்க சூப்பர் சான்ஸ்!!

Must Read

மக்களை மகிழ்ச்சிபடுத்த இன்று தங்க விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதோடு, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் தங்க விலை படிப்படியாக சவரனுக்கு 37 ஆயிரம் ரூபாயை அடைந்து வருகின்றது.

தங்கம் என்னும் உலோகம்:

மனிதர்கள் நாகரிக வளர்ச்சி அடைந்து தன்னை தானே அலங்காரம் செய்து கொள்ள ஆரம்பித்தனர். அப்படி அலங்காரம் செய்து கொள்ளும் போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட உலோகம் தான், தங்கம். இயற்கையிலேயே மினுமினுப்பு கொண்டதால் மக்கள் அதனை விரும்பி அணிய ஆரம்பித்தனர். இதனால் தங்கம் முக்கிய பொருளாக பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படியான தங்கத்திற்கு இந்திய மக்கள் மத்தியில் பெரும் மதிப்பு உண்டு. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்கத்திலான ஆபரணங்களை அணிவதில் அலாதி பிரியம். தங்கம் இப்படியாக இருப்பதால் விலை நாளுக்கு நாள் மாற்றத்துடன் நிர்ணயிக்கப்படுகிறது. மக்களின் தேவை மற்றும் அதன் மதிப்பு வைத்து விலை நிர்ணயிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக தங்கம் தமிழகத்தில் அதிரடியாக உயர்வதும், தடாலடியாக குறைவதுமாக இருந்தது. இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக சரிந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

சென்னையில் இன்று ஆபரண தங்கம் (22 கேரட்) சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ரூ.37,016 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து ரூ.4,627 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் (24 கேரட்) ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்து ரூ.5,006 என்று விற்பனை செய்யப்படுகிறது.

மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் சான்றிதழ் – மாணவி மற்றும் அவரது தந்தை மீது வழக்குப்பதிவு!!

ஒரு சவரன் 240 ரூபாய் குறைந்து ரூ.40,056 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இப்படியாக இருக்க, ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.67.10 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,100 என்று விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -