நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – இன்று முதல் ஆர்.டி.ஓ விசாரணை தொடக்கம்!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவரது தாயாருடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ திவ்யா தலைமையிலான விசாரணை இன்று ஆரம்பிக்கிறது.

நடிகை சித்ரா 10 வருட கடின உழைப்பின் மூலம் சின்னத்திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். தனது ரசிகர்களின் கனவு நாயகியாக வலம்வந்தவர். இந்நிலையில் சென்ற வாரம் அவர் ஒரு தனியார் ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதை தொடர்ந்து நடந்த பிரேத பரிசோதனையில் அவரது மரணம் தற்கொலை தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஹோட்டலில் இருக்கும் போது அவரது கணவர் ஹேம்நாத் உம் உடன் இருந்துள்ளார். இருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடந்துள்ளது என ஹேம்நாத் தெரிவித்தார். எனவே சித்ராவின்மரணம் தொடர்பான விசாரணை ஆர்.டி .ஓ வசம் ஒப்படைக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் சித்ராவின் கணவர் ஹேம்நாத் இடம் நேற்று 5ம் நாளாக விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது. சித்ராவின் தாயான விஜயாவுக்கு ஹேம்நாத்தை பிடிக்கவில்லை.எனவே இந்த திருமணத்தை நிறுத்திவிடுமாறு சித்ராவிடம் கூறியுள்ளார். ஆனால் சித்ராவிற்கு இதில் உடன்பாடு இல்லை.இதனாலேயே இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டின் கடைசி ‘சூரிய கிரகணம்’!!

சித்ரா தற்கொலை செய்துகொண்ட அன்று அவர் படப்பிடிப்பில் இருந்து நள்ளிரவு தான் திரும்பியுள்ளார். குளிப்பதற்காக ஹேம்நாத்தை வெளியிள் நிற்க சொல்லியுள்ளார். அவர் வெளியில் வந்ததும் உடை மாற்றிவிட்டு இருக்கும் போது சித்ராவின் தாயாரிடம் இருந்து போன் கால் வந்துள்ளது. அவர் சித்ராவை ஹேம்நாத்தை விட்டு பிரியுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலினால் தான் அவர் தற்கொலை செய்துள்ளார்.

chithra
chithra

போலீசார் சித்ராவின் தந்தை, தாய், கணவர், அவர் கடைசியாகிய கலந்து கொண்ட நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், ஹோட்டல் ஊழியர், அவருக்கு முதலுதவி அளிக்க வந்த ஆம்புலஸ் ஊழியர் போன்றோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கின் ஆர்.டி.ஓ விசாரணையின் தலைமை அதிகாரியான திவ்யா இந்த வழக்கு தொடர்பாக உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தவுள்ளார். இன்று இந்த விசாரணை ஆரம்பிக்க உள்ள நிலையில் இரு தரப்பினரையும் விசாரிக்க தலா ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப தேவைஇல்லாத நிலையில் கூடுதலாக விசாரிக்க உள்ளவர்களுக்கு மட்டும் சம்மன் அனுப்பினால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. விசாரணையில் முடிவில் ஹேம்நாத் ஏதேனும் சொதப்பினால் அவர் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்யாப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here