2020 ஆம் ஆண்டின் கடைசி ‘சூரிய கிரகணம்’ – இந்தியாவில் தெரியுமா??

0

2020 ஆண்டிற்கான இரண்டாவது மற்றும் கடைசி சூரியகிரகணம் இன்று இரவு 7.15 மணி முதல் நடக்க உள்ளது. பூமியில் பகல் இருக்கும் நாடுகளில் இதனை காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் “கதிரவ மறைப்பு”:

பூமி மற்றும் சூரியனுக்கு இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியன் மறைக்கப்படுவது, சூரிய கிரகணம் எனப்படும். சூரியனின் ஒளி நிலவின் மீது விழுவதால்தான் இந்த நிழல் பூமி மீது விழுகிறது என்பதால் சூரியகிரணம் நிகழ்கிறது இதனை “கதிரவ மறைப்பு” என்றும் கூறுவர். பகல் நேரத்தில் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும். இக்கதிரவ மறைப்பு அமாவாசை அன்று மட்டுமே நிகழும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஜூன் 21 அன்று கடைசியாக சூரியகிரகணம் நிகழ்ந்தது. அது பகல் நேரத்தில் நடந்ததால் அனைவரும் வெறும்கண்ணால் கூட பார்த்தோம். ஆனால் இன்று சூரியகிரகணம் இரவு நேரத்தில் வருவதால் இன்று நடக்கும் சூரியகிரகணத்தை காண இயலாது.இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 14 இரவு 07:03 மணிக்கு தொடங்கி மறுநாள் டிசம்பர் 15 நள்ளிரவு 12:23 மணிக்கு முடிவடையும். இந்த சூரிய கிரகணம் சுமார் ஐந்து மணி நேரம் நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்மா மினி கிளினிக் திட்டம்’ – முதல்வர் இன்று துவக்கி வைப்பு!!

சூரிய கிரகணம் ஜோதிடத்தில் மிகப்பெரிய பங்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகணம் நமது ராசிக்கான பலன்களைப் பாதிக்கிறது என்றும் அதனால் நம் வாழ்க்கையையும் பாதிக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. எனவே சூரியகிரகத்தின் போது கர்பிணிப்பெண்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் உணவு ஏதும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கவும் கூறுகின்றனர். ஆனால் அறிவியலின் படி சூரியகிரகணத்தின் போது புறஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதனால் தன மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என நம் முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here