தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட சுற்றுலா தலங்கள் – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

0
marina beach
marina beach

கொரோனா நோய் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் சுற்றுலா தலங்கள் மார்ச் 21-தேதி முதல் மூடப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுலா தலங்கள் திறப்பு :

கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்தமாதம் திரை அரங்குகளை திறக்க அனுமதி வழங்கியது. மேலும் கொடைக்கானல், ஊட்டி , ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைவாசல் சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் முறையுடன் அனுமதி அளித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31 தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பல தளர்வுகளை அறிவித்த அரசு தற்போது கடற்கரை தொடர்பான சுற்றுலா தளங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் கடந்த மார்ச் 21-தேதி அன்று மூடப்பட்ட சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம்,பெசன்ட் நகர்,நீலாங்கரை, திருவான்மியூர், மாமல்லபுரம் கோயில் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாமல்லபுரம் கடற்கரைக்கு வருவோர் நுழைவுக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்ட வேண்டும் எனவும் பார்வையாளர்கள் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் கடைசி ‘சூரிய கிரகணம்’!!

மேலும், சென்னையில் உள்ள பூங்காக்கள் நீச்சல் குளங்கள் போன்றவற்றை திறக்கவும் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட அறிக்கையில்,”டிசம்பர் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடற்கரையை திறப்பது என முடிவு எடுக்கப்பட்டது, அதன்படி கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இன்று முதல் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்” என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here