தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் அவ்வப்போது மின் கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்புகள் வந்து கொண்டே உள்ளது. அதன்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் உயர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் நாளை (ஜூன் 16) முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 லிருந்து ரூ.2.70க்கு உயர்ந்துள்ளது.
மேலும் 100 -200 யூனிட்டுக்கு ரூ.3.25லிருந்து ரூ.4 ஆகவும், 201 -300 யூனிட் வரை ரூ.5.40லிருந்து ரூ.6 ஆகவும், 301 யூனிட்டுகளுக்கு மேல் மின் கட்டணம் ரூ.6.80லிருந்து ரூ.7.50 ஆக உயரும். வர்த்தக பயன்பாட்டில் உயர்மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.60லிருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது வெளியாகிய இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பால் மக்கள் பலரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!