கிளாமரில் மிரட்டும் பிக்பாஸ் கேபிரியல்லா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் தொலைக்காட்சி நட்சத்திரமான கேபிரியல்லா தனது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட, அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பிக்பாஸ் கேபிரியல்லா

விஜய் டிவியில் ஒளிபரப்பான வெற்றிகரமான நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’ சீசன் 4. கடந்த ஆண்டு ஒளிபரப்பான இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் பதினெட்டு போட்டியாளரில் ஒருவராக பங்குபெற்று மக்கள் மத்தியில் ஆதரவை பெற்றவர் கேபிரியல்லா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக விஜய் தொலைக்காட்சி நேயர்களுக்கு மிகவும் பிரபலமானவர் கேபிரியல்லா. நடன கலைஞரான கேபிரியல்லா விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘ஜோடி நம்பர் ஒன்’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்பு ‘7சி’ என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார் இவர்.

தொடர்ந்து நடிகர் தனுசுடன் ‘3’ திரைப்படத்திலும், நடிகர் சமுத்திரக்கனியுடன் ‘அப்பா’ திரைப்படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் கேபிரியல்லா. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் பங்கேற்ற கேபிரியல்லா தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

புதிய காருடன் “பாரதி கண்ணம்மா” சீரியல் பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

கேபிரியல்லா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘முரட்டு சிங்கிள்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். மற்ற நடிகைகளைப்போல கேபிரியல்லாவும் போட்டோஷூட்களை எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதன்படி கேபிரியல்லா சிவப்பு நிற பாவாடை சட்டையில் இடுப்பு தெரியும்படி உள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் வலைதளத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here