புதிய காருடன் “பாரதி கண்ணம்மா” சீரியல் பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நீபா தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். புதிய காருடன் அவர் வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சீரியல் நடிகை நீபா

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர் ‘பாரதி கண்ணம்மா’. பாரதியை விட்டு பிரியும் கண்ணம்மா, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சௌந்தர்யாவையும் அவர் குடும்பத்தாரையும் சந்திக்கிறார். மீண்டுமாக வீட்டுக்கு வர சொல்லி வற்புறுத்தும் சௌந்தர்யாவை முடிந்த அளவு தவிர்க்கிறார் கண்ணம்மா. தற்போது கண்ணம்மா தங்கி இருக்கும் வீட்டின் முதலாளியின் பெயர் சுமதி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இத்தொடரில் புதிதாக அறிமுகமாகியுள்ள சுமதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இணைந்துள்ளார் நடிகை நீபா. குழந்தை நட்சத்திரமாக பல சினிமாக்களில் நடித்துள்ள நடிகை நீபா ஒரு நடன கலைஞரும் கூட. தமிழ்த்திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகை நீபா.

தமிழக சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

ஆனால் இவர் நடித்துள்ள திரைத்தொடர்கள் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு அடையாளத்தை பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என்ற தொடரில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் நீபா. இவர் தற்போது நடித்து வரும் பாரதி கண்ணம்மா தொடரும் இவருக்கு அதிகமான ரசிகர்களை சம்பாதித்து தந்துள்ளது.

இந்நிலையில் நீபா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தான் வாங்கிய புதிய காருடன் உள்ள புகைப்படத்தை நீபா வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் நீபாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here