கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணிநேரத்தில் ஒருவர் உயிரிழப்பு – உத்திரபிரதேசத்தில் பரிதாபம்!!

0

உத்திர பிரதேசத்தை சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் இறந்ததற்கு காரணம் தடுப்பூசி அல்ல என்று அம்மாநில நிர்வாகம் மறுத்து வருகிறது.

சுகாதார பணியாளர் பலி

கடந்த சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ளபடி கொரோனா தடுப்பு களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியில் பக்கவிளைவுகள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதை தொடர்ந்து இதுவரை காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட சாதாரண நோய்களுடன் 447 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#ENGvsSL டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அபார வெற்றி!!

உத்திர பிரதேச மொரதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 46 வயதான மஹிபால் சிங் என்பவர் வார்டு பாயாக பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை மதியம் இவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதை தொடர்ந்து பகல்நேர பணியில் இருந்துவந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை சுகாதார துறை கூறியிருப்பதாவது, அவருடைய மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமில்லை. அவருக்கு உடலில் வேறு பிரச்சனைகள் இருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here