பள்ளி மாணவர்கள் வருகை கட்டாயமில்லை – கண்காணிப்பு குழு தலைவர் அறிவிப்பு!!

0

நாளை முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதில் மாணவர்களின் வருகை கட்டாயம் அல்ல என்று திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

சுமார் 10 மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பள்ளிகள் நாளை முதல் தமிழகத்தில் திறக்கப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் இன்று முதல் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு சுமார் 506 பள்ளிகள் உள்ளது. மேலும் அங்கு 75,700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது நிர்மல் ராஜ் தலைமையில் வனவள மைய மேற்பார்வையாளர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் 10க்கும் மேற்பட்டோர்களை குழுவாக அமைத்து பள்ளிகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் 10 ஜிங்க் மற்றும் 10 வைட்டமின் மாத்திரைகள் என மொத்தம் 20 மாத்திரைகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனையை மேற்கொள்ள தெர்மல் ஸ்கேன் இயந்திரம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 21ம் தேதி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!!

வருகை கட்டாயமல்ல:

அதுமட்டுமல்லாமல் ஒரு வகுப்பில் 20 முதல் 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மாணவர்கள் அனைவரும் 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் கூறியதாவது, “பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை கட்டாயம் இல்லை என்றும் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரும் போது பெற்றோர்களின் அனுமதி கடிதம் கட்டாயம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here