ஜனவரி 21ம் தேதி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!!

0

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 21ம் தேதி நடக்கவிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஆலோசனை கூட்டம்:

திமுக கட்சியின் வளர்ச்சி & ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்தும், சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை செய்வதற்கான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 21ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து பேசிய அவர் “வரும் 21ம் தேதி மலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள அக்கூட்டத்தில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழக மாவட்ட செயலாளர்கள் 77 பேருக்கும், புதுச்சேரியை சேர்ந்த திமுக நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து வீழ்ச்சி அடையும் தங்கத்தின் விலை – குஷியில் நகைப்பிரியர்கள்!!

ஏற்கனவே ஸ்டாலின் “கிராம சபை” எனும் பெயரில் மக்களிடம் குறைகள் கேட்பு முகாம்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்தும் ஸ்டாலின் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பிரச்சாரம் குறித்ததும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here