தொடர்ந்து வீழ்ச்சி அடையும் தங்கத்தின் விலை – குஷியில் நகைப்பிரியர்கள்!!

0

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தங்கத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் குஷி அடைந்துள்ளனர்.

தங்கம்:

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தை விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. இதனால் சுபநிகழ்ச்சிகளை நடத்த காத்திருக்கும் மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் நகை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தனர். தற்போது கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பண்டிகை காலத்திற்கு முன்பில் இருந்து தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மற்றும் நகைப்பிரியர்கள் நகை வாங்குவதை மகிழ்ச்சியாக துவக்கியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

10ம் & 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை திறப்பு – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆய்வு!!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

சென்னையில் இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. தற்போது சென்னையில் 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 36,816 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,602 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி 1 கிராமிற்கு ரூ.69.70, 1 கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 69,700ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here