ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எந்த கட்சியிலும் சேரலாம் – ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு!!

0
சூப்பர் ஸ்டார் ரஜினியை படு மோசமாக விமர்சனம் செய்யும் ரசிகர்கள் - காரணம் என்ன தெரியுமா?

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் மக்கள் மன்ற பதவியிலிருந்து ராஜினாமா செய்து வேறு எந்த கட்சியிலும் சேரலாம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் அறிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ரஜினி ரசிகர் என்பதை மறக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மன்ற நிர்வாகி அறிக்கை

கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி உடல்நலக்குறைவால் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். அதற்கு முன்னதாக திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதனால் தான் அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ரஜினியின் ரசிகர்கள் பலரும் அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டு போராட்டங்கள் நடத்தினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

மேலும் சென்ற வாரங்களில் ரஜினி தனது முடிவை மாற்றவேண்டும் என்று சொல்லி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து ரஜினி, என்னை அரசியலுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். யார் சொன்னாலும் நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. என்னை மேலும் வருத்தப்படுத்த வேண்டாம் என்று ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

10ம் & 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை திறப்பு – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆய்வு!!

தொடர்ந்து தற்போது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து பணிபுரிய விரும்பினால் மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து வேறு கட்சிகளில் சேரலாம். ஆனால் என்றைக்கும் நாம் ரஜினியின் ரசிகர்கள் என்பதை மறக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 4 செயலாளர்கள் மு.க ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அறிவாலயத்தில் திமுக கட்சியில் இணைந்துள்ளனர். மேலும் தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் செயலாளர்கள் திமுக கட்சியில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here