#ENGvsSL டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அபார வெற்றி!!

0

இலங்கைக்கு எதிரான தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முடிவில் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இங்கிலாந்து vs இலங்கை:

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. இதற்கான முதல் போட்டி கடந்த 14ம் தேதி துவங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தனது முதல் இன்னிங்சில் இலங்கை, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள திணறியது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 135 ரன்களுக்கு தனது ஆட்டத்தை இழந்துள்ளது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக சந்திமால் 28 மற்றும் மாத்தியூஸ் 27 ரன்கள் எடுத்துள்ளனர். இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்து வீசிய பெஸ் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் ரூட் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரூட் 228 மற்றும் லாரன்ஸ் 73 ரன்களை குவித்துள்ளனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 421 ரன்களை குவித்தது. இலங்கை தரப்பில் பெரேரா 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது.

7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி:

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக திரிமானே 111 ரன்களும் மாத்தியூஸ் 71 ரன்களும் குவித்தனர். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 359 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு 76 ரன்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்தது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எந்த கட்சியிலும் சேரலாம் – ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு!!

அதன்பிறகு தனது ஆட்டத்தை துவங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 76 ரன்களை எடுத்து முதல் டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மேலும் இந்த அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி அன்று துவங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here