#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – இந்தியாவிற்கு 328 ரன்கள் இலக்கு!!

0

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தற்போது தங்களது கடைசி டெஸ்ட் போட்டியை பிரிஸ்பேனில் வைத்து விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் சிராஜ் இரண்டாவது இன்னிங்சில் அருமையாக பந்து வீசியுள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது பிரிஸ்பேனில் உள்ள மைதானத்தில் வைத்து தங்களது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்து தனது ஆட்டத்தை இழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மார்னஸ் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்திய அணி சார்பில் ,நடராஜன், தாகூர் மற்றும் சுந்தர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பிறகு இந்திய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது. இந்திய அணி சார்பில் சுந்தர் 62 மற்றும் தாகூர் 67 ரன்களை குவித்துள்ளனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 336 ரன்களுக்கு தனது ஆட்டத்தை இழந்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் ஹெஸில்வுட் 5 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 36 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது. அப்போது போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டது.

328 ரன்கள் இலக்கு:

இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 294 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்துள்ளது. இந்திய அணி சார்பில் சிராஜ் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை எடுத்து சாதித்துள்ளார். மற்றொரு வீரர் தாகூர் 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

#ENGvsSL டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அபார வெற்றி!!

தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி இந்தியா அணிக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி விளையாடி வருகிறது. களத்தில் ரோஹித் மற்றும் கில் விளையாடி வருகின்றனர். மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

லைவ் ஸ்கோர்:

இந்தியா – 4\0
ரோஹித் – 4*
கில் – 0*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here