புதிதாக டாட்டூ குத்திய வனிதா..இது அடுத்த கணவரின் பெயரா?? – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!!

0

வனிதா தற்போது தனது இன்ஸ்டாக்ராமில் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அனைவரும் வாய் அடைத்து போய் உள்ளனர். சிலர் அவரது மாற்றத்திற்கு வரவேற்பும் அளித்துள்ளனர். சிலர் இது இப்பொது தேவையா என்பது போல் கலாய்த்தும் வருகின்றனர்.

வனிதா விஜயக்குமார்:

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகரான விஜயகுமாரின் மூத்த மகள் தான், வனிதா. இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து உள்ளார். அதன் பின் திரைத்துறையை விட்டு விலகிய வனிதா திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பலரது கவனத்தையும் பெற்றார். காரணம், அவரது துடுக்கான பேச்சு.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அனைவரிடமும் சண்டை போட்டு கொண்டும், சண்டையை உருவாக்கியும் விட்டு கொண்டு இருந்தார். இதனால் அனைவரும் அவரை வெறுத்தனர். பின், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்றார்

இந்த நிகழ்ச்சியில் தனது சமையல் திறமையினை காட்டி பலரையும் ஆச்சிரியம் அடைய வைத்தார். இப்படியான சூழலில் தன்னுடன் வேலை பார்த்த பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் அவருடன் நன்றாக வாழ்ந்து விட்டு அவர் அதிகமாக குடிக்கும் காரணத்தால் அவரை விட்டு பிரிந்து விட்டார். இதனை அடுத்து அனைவரும் அவரை கேலி மற்றும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – இந்தியாவிற்கு 328 ரன்கள் இலக்கு!!

இப்படியான சூழலில், இவர் தனது திருமணத்தின் போது பீட்டர் பாலின் பெயரை தனது கையில் பச்சை குத்தி கொண்டார். ஆனால், அவரை விட்டு பிரிந்ததும், தற்போது அந்த டாட்டூவினை மறைப்பது போல் புது விதமாக மாற்றி உள்ளார். இதனை பார்த்து சிலர் “அடுத்த கணவரின் பெயர் ஆ??” என்றும் “இந்த வயதில் இவை எல்லாம் தேவையா?” என்றும் கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here