இந்தியாவில் பக்கவிளைவுகளுடன் கொரோனா தடுப்பூசி – இதுவரை 447 பேர் பாதிப்பு!!

0

நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசியால் சில பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 447 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதகமான விளைவுகள்:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளாகிய கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த தடுப்பூசிகள் ஜனவரி 17 முதல் நாடு முழுவதும் போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தடுப்பூசி போடுவதில் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு முதலாவதாவும், பின்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசி வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதை தொடர்ந்து நேற்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த தடுப்பூசி முதல் கட்டமாக போடப்பட்டது. சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டன. இந்த தடுப்பூசியில் சில பக்க விளைவுகள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காய்ச்சல், தலை வலி, வாந்தி, மயக்கம், உடலில் லேசான தடிப்புகள் ஆகியவை தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு உண்டாகியிருக்கிறது. இதுகுறித்து தற்போது ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து வீழ்ச்சி அடையும் தங்கத்தின் விலை – குஷியில் நகைப்பிரியர்கள்!!

இந்த பக்கவிளைவினால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 447 பேர் ஆவர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் வடக்கு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரதுறை செயலாளர் அக்னானி கூறியுள்ளார்.

மேலும் இதைத் தொடர்ந்து மத்தியபிரதேசத்தில் 12 சுகாதார பணியாளர்களும், விதர்பாவில் 9 சுகாதார பணியாளர்களும், உஜ்ஜைனில் ஒருவர் மற்றும் கொல்கத்தா மருத்துவமனையில் ஒருவர் ஆக அனைவரும் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here