10ம் & 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நாளை திறப்பு – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆய்வு!!

0

தமிழகத்தில் நாளை முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. மேலும் சுமார் 10 மாதங்களாக மூடி இருந்த நிலையில் 10ம் மற்றும் 12ம் வகுப்புக்கான பள்ளிகள் நாளை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக அனைத்து பெற்றோர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆய்வு:

தற்போது நாளை பள்ளிகள் திறக்கவிருக்கும் நிலையில் சென்னையில் உள்ள ஷெனாய் திருவிக மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, “மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும். மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் அனைத்து வகுப்பறைகளில் சானிடைசர்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் பள்ளிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஓர் வகுப்பறையில் 20 முதல் 25 மாணவர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். மேலும் பெற்றோர்களின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும். தவிர மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயபடுத்தக்கூடாது. இதேபோல் அனைத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளை இன்று ஆய்வு செய்யவுள்ளனர் என்று கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

வெற்றி மகுடம் சூடிய ஆரி அர்ஜுனன் – பிக்பாஸ் 4 இறுதி முடிவுகள்!!

கல்லூரி பணியாளர்களுக்கு எச்சரிக்கை:

கல்லூரி கல்வி இயக்குனரகம் கல்லூரி பணியாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது என்னவென்றால் கல்லூரி பணியாளர்கள் தங்களது குறைபாடுகளை மேல் அலுவலர்களிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும். தவிர வாட்ஸ் ஆப் குழுக்களில் குறைகளை பதிவு செய்யக்கூடாது. மீறினால் சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here