சென்னையில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா அபராதம் – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

0

சென்னையில் மட்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர் மற்றும் நிறுவனகளிலிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத்தொகை 3.48 கோடி ரூபாய் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அபராத தொகை

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாநில அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர் மற்றும் நிருவனங்களிலிருந்து அபராதத்தொகை வசூலிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் வசூலிக்கப்பட்ட அபராதத்தொகை சுமார் மூன்றரை கோடி என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடைகள், வங்கிகள், நிறுவனங்கள் ஆகிய இடங்களில் தனிநபர் இடைவெளி மற்றும் மற்ற விதிமுறைகள் கையாளப்படுகிறதா?? என ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஆய்வு செய்த போது சென்னையில் மட்டும் இந்த விதிமுறைகளை கையாளாத நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றிலிருந்து கடந்த மார்ச் மாதம் முதல் ஜனவரி 8 ம் தேதி வரை வசூலிக்கப்பட்ட பணம் மூன்று கோடி 48 லட்சம் ரூபாய் ஆகும்.

மேலும் அபராதம் வசூலிப்பது தமிழக அரசின் நோக்கம் இல்லை. மக்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தகைய வழிமுறைகளை அரசு கையாள வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கண்டிப்பாக அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் தமிழக அரசின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஓடிடியில் தாமதமாக தான் வெளியாகும் – படக்குழு அறிவிப்பு!!

இதனை கருத்தில் கொள்ளாமல் மக்கள் தங்கள் இஷ்டம் போல செய்கிறார்கள். பேருந்தில் கூட பயணிகள் மாஸ்க் அணிவதில்லை என்கிற புகார்களும் அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கின்றது. அதனால் தான் மக்களிடம் கொரோனா தீவிரத்தை உணர்த்தும் வகையில் அபராதம் வசூலிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here