பறவைக்காய்ச்சல் எதிரொலி – 15,000 பறவைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு!!

0

நாடெங்கிலும் பரவிவரும் பறவை காய்ச்சலின் எதிரொலியாக மஹாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் சுமார் 15,000 பறவைகளை  அழிக்க  மாவட்ட நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பறவைக்காய்ச்சல்:

நாடெங்கிலும் தற்போது பரவி வரும் பறவை காய்சலானது தற்போது கேரளா, ஹரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வெகு வேகமாக பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் சமீபத்தில் மத்திய பூங்காவில் திடீரென அதிக அளவில் காகங்கள் இறந்து விழுந்தன. கேரளாவில் ஒரு வாத்து பண்ணையில் பரவிய பறவைக்காய்ச்சலால் அங்குள்ள பல வாத்துகள் இறந்தன. இது போலவே தற்போது மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் இந்த பறவை காய்ச்சலானது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே பார்பனி, பீட் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளதை தொடர்ந்து தற்போது லாத்தூர் மாவட்டத்திலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

bird flu in india latest
bird flu in india latest

இது குறித்து பேசிய லாத்தூர் மாவட்ட ஆட்சியர் பிரித்விராஜ், “ஏற்கனவே கேந்திருவடி, சுக்னீ மற்றும் உத்கீர் தாலுக்காவை சேர்ந்த வஞ்சார் சாவடியிலும் இந்த பறவைக்காய்ச்சலின் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது லாத்தூர் மாவட்டத்திலும் பரவியுள்ளது. இறந்த பறவைகளின் உடல்கள் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன. பதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பறவைகளை அழிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தமிழகத்தில் ஜன.,19 முதல் பள்ளிகள் திறப்பு – அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!!

மேலும் கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் இது குறித்து கூறும்போது, ” பாதிக்கப்பட்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் சுமார் 15,000 பறவைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனை சுற்றி 10கி மீ தொலைவுக்கு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க மாவட்ட அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here