தெறிக்கவைக்கும் மாஸ்டர் பட போஸ்டர் – ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்!!

0
poster

இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்புகளோடு அனைவரும் காத்திருக்கும் தளபதி விஜயின் மாஸ்டர் படம் நாளை வெளியாகவுள்ளது. நாளை படத்தின் வெளியீட்டை அறிவிக்கும் வகையில் தற்போது படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் ட்விட்டரில் வைரலாகி கொண்டிருக்கிறது.

மாஸ்டர் பட போஸ்டர்

நாளை வெளியாக போகும் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது. சர்கார் படத்தையடுத்து விஜய் நடிக்கும் 64 வது படமாக மாஸ்டர் உருவாகியிருக்கிறது. கைதி மற்றும் மாநகரம் ஆகிய வெற்றிப்படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் படத்தை வலுசேர்க்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி உள்ளிட்ட இன்னும் அநேக திரைப்பட்டாளங்களுடன் இப்படம் உருவாகியிருக்கிறது.

தனியார் பேருந்து மின் கம்பியில் உரசி 5 பேர் பலி – தஞ்சாவூரில் நடந்த விபரீதம்!!

இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. நீண்ட நாளைக்கு பிறகு நாளை இப்படம் திரையரங்குகளில் பிரவேசிக்கவுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் விஜய் வில்லுடன் நிற்கும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த படம் ட்விட்டரில் வைரலாகி கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here