70,000 டிரம்ப் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் – அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை எதிரொலி!!

0

அமெரிக்க அதிபர் டிரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் ட்விட்டர் பதிவுகளை பதிவிட்டதாக கூறி அவரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் 70,000 பேரின் ட்விட்டர் கணக்குகள் தற்போது முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ட்விட்டர் கணக்குகள் முடக்கம்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை தொடர்ந்து அதிபர் டிரம்ப்ன் ஆதரவாளர்கள் கடந்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்கிய சம்பவம் நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய டிரம்ப் ஆதரவாளர்களான 70,000 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டிரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் ட்விட்டர் பதிவுகளை பதிவிட்டதால் அவரின் ட்விட்டர் கணக்கு முற்றிலுமாக முடக்கம் செய்யப்பட்டது. அந்த கணக்கை நிறுத்திய சில மணிநேரத்திலேயே அவரின் ஆதரவாளர்களின் கணக்குகளை அந்நிறுவனம் முடக்க தொடங்கியது. ஒரு தனி நபர் பல கணக்குகளில் செயல்படுவதை அறிந்த ட்விட்டர் நிறுவனம் எல்லா கணக்குகளையும் முற்றிலுமாக முடக்கம் செய்தது.

சம்யுக்தாவை பார்த்து கண் கலங்கிய பாலா – பாச போராட்டங்களுடன் வெளியான பிக் பாஸ் ப்ரோமோ!!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை, எதிர்கால அபாயத்தை உணர்த்தும் வகையில் இருக்கிறது என கருதப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 20ம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதை தொடர்ந்து ஜனவரி 17ம் தேதி அமெரிக்க கேபிடல் மற்றும் ஸ்டேட் கேபிடல் மீது இரண்டாவது தாக்குதல் நடக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு 70,000 ட்விட்டர் கணக்குகளை முடக்கியதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here