#INDvsAUS சிட்னி டெஸ்ட் – இனரீதியாக திட்டிய ரசிகர்கள்!! மன்னிப்பு கேட்ட வார்னர்!!

0
MELBOURNE, AUSTRALIA - DECEMBER 23: David Warner prepares for a private net after an Australian Nets Session at the Melbourne Cricket Ground on December 23, 2020 in Melbourne, Australia. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் போது இந்தியா அணி வீரர்களை ஆஸ்திரேலியா ரசிகர்கள் இனரீதியாக திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் இந்தியா அணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணி வீரர் வார்னரும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா ரசிகர்கள் சிலர் மது அருந்திவிட்டு இந்தியா அணியின் பும்ராஹ் மற்றும் முகமத் சிராஜை இனரீதியாக திட்டி உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து கள நடுவரிடம் ரஹானே புகார் தெரிவித்துள்ளார். மேலும் ஐசிசி போட்டி நடுவராக டேவிட் பூனிடம் பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது. திட்டிய அந்த 6 ரசிகர்களை பாதுகாவலர்கள் வரவழைக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் தனது வருத்ததை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2ம் நாளாக இனவெறி சர்ச்சை நடந்துள்ளதால் இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கான தலைவர் சீன் கேரல் இந்தியா அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்த ஐசிசி இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் தகவலை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு உத்தரவிட்டுள்ளது.

கோஹ்லியை பின்னுக்கு தள்ளிய ஸ்மித் – டெஸ்ட் போட்டி பேட்டிங் தரவரிசை வெளியீடு!!

மேலும் இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்தியா அணி வீரர்களிடம் தனது மன்னிப்பை தெரிவித்துள்ளார். இனரீதியாக இழிவுபடுத்துவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் ரசிகர்கள் சிறப்பாக நடந்து கொள்ள தவறியுள்ளார்கள். மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை சிறப்பாக விளையாடி டிரா செய்த இந்தியா அணிக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here