கோஹ்லியை பின்னுக்கு தள்ளிய ஸ்மித் – டெஸ்ட் போட்டி பேட்டிங் தரவரிசை வெளியீடு!!

0

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் அவர் முன்னேறியுள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றனர். 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இது வரை 3 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர். சிட்னியில் வைத்து நடந்த மூன்றாவது போட்டி யாரும் எதிர்பாராத வகையில் டிராவில் முடிந்தது. தற்போது இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி போட்டி வரும் 15ம் தேதி அன்று பிரிஸ்பேனில் வைத்து தொடங்கவுள்ளது. நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் அந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அந்த போட்டியில் அவர் விளையாடிய முதல் இன்னிங்சில் தனது 27வது சத்தத்தை பதிவு செய்து அசத்தினார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் 81 ரன்களை குவித்துள்ளார்.

பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம்:

தற்போது டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் நியூஸிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மித், கோஹ்லியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவர் 900 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில உள்ளார்.

‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஓடிடியில் தாமதமாக தான் வெளியாகும் – படக்குழு அறிவிப்பு!!

3 வது இடத்தில் கோஹ்லி 870 புள்ளிகளும், 866 புள்ளிகளுடன் 4வது இடத்தில் லாபுசாக்னே மற்றும் 781 புள்ளிகளுடன் பாபர் அசாம் 5வது இடத்தில் உள்ளார். இந்தியா அணியின் தற்போதைய கேப்டன் ரஹானே 7வது இடத்திற்கு பின்னடைந்துள்ளார். மேலும் புஜாரா 8 வது இடத்திற்கும் ரிஷாப் பாண்ட் 26 வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here