‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஓடிடியில் தாமதமாக தான் வெளியாகும் – படக்குழு அறிவிப்பு!!

0

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிம்புவின் ஈஸ்வரன் படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வரும் 14ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். தற்போது இந்த முடிவுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகிறது.

ஈஸ்வரன்:

சிம்பு கடைசியாக நடித்து வெளிவந்த படம் தான் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம். இந்த படம் சிம்புவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. மேலும் சிம்பு முன்பு போல் இல்லாமல் உடல் எடை குறைத்து வேறு ஆள் போல் காட்சியளித்தார். தற்போது அவரது ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் உடல் எடையை குறைத்து அனைவரையும் கவரும் வண்ணத்தில் தனது உடல் அமைப்பை மாற்றியுள்ளார். மேலும் இந்த கொரோனா காலத்தில் கூட சிம்பு இந்த ஈஸ்வரன் திரைப்படத்தை 1 மாதத்தில் நடித்து முடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நித்தி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை மாதவ் மீடியாவின் மாதவ் காப்பா இந்த படத்தை தயாரித்துள்ளார். தற்போது இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். மேலும் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் இந்த படத்தை காண்பதற்காக ஒலிஃபிலிக்ஸ் என்னும் ஓடிடி தலத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கலாம் என்றும் அறிவித்திருந்தனர்.

வாட்ஸ்ஆப் புதிய விதிமுறைகள் – இணையத்தில் ட்ரெண்ட்டாகும் மீம்ஸ்!!

இதனை அறிந்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திரையரங்கில் வெளியாகும் போது ஓடிடி தளத்தில் வெளியானால் சட்டத்திற்கு புறம்பாக படம் இணையத்தில் வெளியாகும். இதனால் திரையரங்கிற்கு படம் காண்பதற்கு மக்கள் வரமாட்டார்கள். எனவே படம் ஓடிடி தளத்தில் வெளியானால் திரையரங்கில் வெளியாகாது என்று அதிரடியாக தெரிவித்தனர். இதனை அடுத்து ஈஸ்வரன் திரைப்படம் ஓடிடி தளத்தில், படம் திரையரங்கில் வெளியான மூன்று அல்லது நான்கு வாரத்திற்கு பின் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here