வாட்ஸ்ஆப் புதிய விதிமுறைகள் – இணையத்தில் ட்ரெண்ட்டாகும் மீம்ஸ்!!

0

தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய விதிமுறைகளில் அனைத்து டேட்டாவையும் நிறுவனம் எடுப்பதற்கு பயனாளர்கள் அனுமதி அளிக்க வேண்டும் இல்லையெனில் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியாது என்று அறிவித்திருந்தது. தற்போது இதனை கலாய்த்து இணையத்தில் பல மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் ஆப்பை கலாய்க்கும் நெட்டிசன்கள்:

தற்போதைய காலங்களில் பயனாளர்களுக்கு வாட்ஸ் ஆப் செயலி மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. தகவல்களை பரிமாறுவதற்கு, ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி போன்றவை பெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த செயலி மூலம் பல பொய்யான தகவல்கள் பரவி வந்தது. இதனை தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.  மேலும் இதன்மூலம் ஓர் தகவல் 5 பேருக்கு மட்டும் பகிரும் ஆப்ஷனை செய்தனர்.

மேலும் தகவலை பரிமாறுபவரே அதற்கு பொறுப்பு என்ற விதிமுறையும் உள்ளது. மேலும் வரப்போகிற புதிய அப்டேட்டில் பயனாளர்களின் டேட்டா அனைத்தயும் வாட்ஸ் ஆப் கண்காணிப்புக்கு உட்படுத்த அனுமதி வழங்கினால் மட்டுமே வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘தனிநபர் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது’ – வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கம்!!

தற்போது இணையத்தில் வாட்ஸ் ஆப்பை கலாய்த்து பல மீம்ஸ்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மீம் கிரியேட்டர்கள் எதாவது சின்ன செய்தி கிடைச்ச கூட பெரிய அளவுக்கு கலாய்த்து வருவார்கள்.   ஆனால் அவர்களுக்கு ஏற்றார் போல் இப்பொது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய விதிமுறை என்ற பெயரில் தனிநபரின் அனைத்து டேட்டாவையும் பார்ப்பதற்கு உரிமம் கேட்டுள்ளது.

இந்த மாறி ஒரு தகவல் கிடைச்சா சும்மாவா இருப்பாங்க நம்ம மீம் கிரியேட்டர்ஸ். இதனை வைத்து இணையத்தில் தற்போது கலாய்த்து வருகிறார்கள். மேலும் வாட்சப்பின் தலைமை அதிகாரி மார்க், அவரையும் விடவில்லை. அவரையும் கலாய்த்து வருகிறார்கள். தற்போது அந்த மாதிரியான அனைத்து மீம்களும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here