வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவையும் உச்சநீதி மன்றம் அமைத்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்:

டெல்லியில் கடந்த ஒன்றறை மாத காலமாக நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சு வார்த்தைகளும் பலன்தராத நிலையில் இப்பிரச்சினை உச்சநீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் தலைமை நீதிபதி S.A.போப்ட்டே மற்றும் நீதிபதிகளான A.S.போபண்ணா, V.ராமசுப்ரமணியம் ஆகியோர் அதனை விசாரணை செய்தனர். அது குறித்து பேசிய நீதிபதிகள் குழு, “வேளாண் சட்ட பிரச்சினையை அரசு கையாண்ட விதம் எந்த பலனையும் தரவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசு நடத்தி வரும் பேச்சு வார்த்தைகளும் திருப்பதியை தருவதாக இல்லை. இந்த சட்டங்களுக்கு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்காலிகமாக இச்சட்டங்களை நிறுத்தி வைப்பது பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்” என்று கூறினர். மேலும் அவர்கள் “வேளாண்சட்டங்களுக்கு ஆதரவாக ஒரு மனு கூட இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த போராட்டத்தை சட்ட ஒழுங்கு பிரச்னையாக பார்ப்பதைவிட போராட்டத்துக்கான உரிமை என்று பார்க்க வேண்டும்.  இச்சட்டங்களை அரசு ரத்து செய்யுமா அல்லது உச்சநீதிமன்றம் ரத்து செய்யலாமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டுமெனவும் இது குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்படும், அது சமர்ப்பிக்கும் அறிக்கைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும்.

வாட்ஸ்ஆப் புதிய விதிமுறைகள் – இணையத்தில் ட்ரெண்ட்டாகும் மீம்ஸ்!!

விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. உச்சநீதிமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் உள்ளது” என்றும் கூறினார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் இன்று மறு அறிவிப்பு வரும்வரையில் 3 சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது தற்காலிக தீர்வு தானன்றி நிரந்தர தீர்வு அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here