‘தனிநபர் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது’ – வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கம்!!

0

வாட்ஸ் ஆப் செயலியின் புதிய விதிமுறைகள் குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. மேலும் பயனாளர்கள் தற்போது இந்த செயலியை உபயோகப்படுத்த தவிர்த்து வருகின்றனர். தற்போது புதிய விதிமுறைகள் குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ் ஆப்:

பயனாளர்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் செயலி தான் வாட்ஸ் ஆப். இந்த செயலி மூலம் தகவல் பரிமாறுவது, வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதி போன்ற பல வசதிகள் இருக்கின்றது. இந்த செயலி மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய விதிமுறைகளை விதித்து இதற்கு அனுமதி அளித்தால் மட்டுமே வாட்ஸ் ஆப் செயலியை பயனாளர்கள் பயன்படுத்த முடியும் என்ற அதிரடியான தகவலை வெளியிட்டது.

மேலும் இதற்கு வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி வரை தான் கால அவகாசம் உள்ளது. புதிய விதிமுறைகளில் பயனாளர்களின் மொத்த டேட்டாவையும் அவர்கள் எடுக்கும் உரிமைக்கு நாம் அனுமதி அளிக்க வேண்டும் என்பது போல் இருந்தது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் தற்போது டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற மாற்று செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் தற்போது வாட்ஸ் ஆப் செயலியின் சந்தை நிலவரம் குறையத் தொடங்கியது. தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் அளிக்கும் விளக்கம்:

1. பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ்களை பார்க்கவும் மற்றும் அழைப்புகளை கேட்கவும் முடியாது. மேலும் இதனை முகநூலில் பகிர இயலாது.

2. பயனாளர்களின் அழைப்பு (Call) போன்ற தகவல்களை பதிவுசெய்ய படமாட்டாது. மேலும் இதனை முகநூலிலும் பகிரப்படாது.

3. பயனாளர்கள் அனுப்பும் லொகேஷனை வாட்ஸ் ஆப் செயலி பதிவு செய்யாது. மேலும் முகநூலிலும் பகிரப்படாது.

4. பயனாளர்களின் தொடர்புகள் பற்றிய தகவலை முகநூலில் பகிரப்படாது.

5. வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்தும் குழுக்கள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பான முறையில் இருக்கும்.

6. பயனாளர்கள் மெசேஜ்களை அழிப்பதற்கான வசதியை செய்துகொள்ளலாம்.

7. பயனாளர்கள் தங்களின் டேட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here