#INDvsAUS சிட்னி டெஸ்ட் – ஸ்மித் செய்த செயல்!! ஆஸ்திரேலியா கேப்டன் விளக்கம்!!

0

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான நேற்று ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் இந்தியா அணியின் ரிஷாப் பாண்ட் இட்ட பேட்டிங் கார்டை மாற்றியமைத்துள்ளார். இதற்கான புகைப்படமும் வெளியானது. தற்போது இது குறித்து ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெயின் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி சிட்னியில் வைத்து தங்களது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. போட்டியின் கடைசி நாளான நேற்று இந்தியா அணியின் ரிஷாப் பாண்ட் அருமையாக பேட்டிங் செய்து வந்தார். அவர் 97 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்துள்ளார். மேலும் போட்டியின் நடுவே ஸ்மித் செய்த ஒரு செயல் அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொதுவாகவே பேஸ்ட்மேன்கள் ஸ்டும்பிற்கு அருகே பேட்டிங் கார்ட் என்னும் குறியை இட்டு அதற்கு ஏற்றார் போல் பந்துகளை கணித்து விளையாடி வருவார்கள். இதே போல் இந்தியா அணியின் பாண்டும் பேட்டிங் கார்டை இட்டுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்மித் யாருக்கும் தெரியாமல் அந்த கார்டை மாற்றியமைக்க முயன்றுள்ளார். இந்த செயல் ஸ்டம்ப் கேமரா மூலம் பதிவாகி அதற்கான புகைப்படமும் வெளியாகியது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொந்தளித்து வந்துள்ளனர். தற்போது இந்த செயல் குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டின் பெயின் விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அவர் கூறியதாவது,”போட்டி முடிந்த பின்னர் நான் ஸ்மித்திடம் இந்த செயல் குறித்து பேசினேன். அவர் அதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கார்டை மாற்றியமைக்க முயலவில்லை. பொதுவாகவே களத்தில் ஸ்மித் பீல்டிங் செய்யும் போது பேட்டிங் கிரீஸிற்கு சென்று பேட்டிங் பயிற்சி மேற்கொள்வர். மேலும் நேற்றைய போட்டியில் பாண்ட் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு பந்து எவ்வாறு வீச வேண்டும் என்பதை கணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். இதனை அனைவரும் தவறாக புரிந்துகொள்கின்றனர்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே பந்து கீறிய செயலினால் இவர் ஒரு ஆண்டு காலம் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செயல் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here