தமிழகத்தில் ஜன.,19 முதல் பள்ளிகள் திறப்பு – அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!!

0

தற்போது தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு மிகவும் ஆபத்தானது என்று பாமக கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளை திறப்பதற்காக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இந்த முடிவு குறித்து பாமக கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “மாணவர்களின் கல்வி நலனை கருதி 10 மற்றும் 12ம் வகுப்புகளை வரும் 19ம் தேதி திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூறினாலும் மறுபுறம் வைரஸ் தொற்றில் இருந்து நாம் முழுவதுமாக மீளவும் இல்லை என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தமிழகத்தில் தீவிரமாக பரவினாலும் மருத்துவர்கள், செவிலியர்களின் தீவிர உழைப்பால் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. தடுப்பூசி வழங்கும் பணி இன்னும் தோடங்கவேயில்லை. அந்த பணி தொடர்ந்து முழுவதுமாக வைரசை விரட்டிய பின்பே நாம் பள்ளிகள் திறப்பது பற்றி சிந்திக்கலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் அனைவருக்கும் பொதுவாக தான் உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு முதன்மை காரணம் கழிப்பறைகள் என்றே மருத்துவர்கள் கூறுவார்கள். மேலும் 25 மாணவர்கள் மட்டும் அனுமதி அளித்தாலும் அவர்கள் பக்கத்தில் அமர்ந்து இருந்தால் தொற்று பரவக்கூடும். மேலும் அவர்கள் மூலம் அவர்களின் வீட்டில் இருப்பவர்களுக்கும் தொற்று பரவும். அப்படி நிகழ்ந்தால் நிலைமை கையை விட்டு போய்விடும். சான்றாக மும்பையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. திறந்த 1 வாரத்திலையே 100கும் மேற்பட்ட மாணவ, ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மாஸ்டர் படத்தை இணையத்தில் லீக் செய்த நிறுவனத்தின் மீது புகார் – படக்குழு நடவடிக்கை!!

மேலும் நம் சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட நிலையில் 100கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் தொற்றுக்கு ஆளாகினர். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். உலக நாடுகளை பொறுத்தவரை இங்கிலாந்தில் நாளுக்கு 50,000பேருக்கு மேல் உருமாறிய கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டும்மல்லாமல் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை கட்டுக்குள் உள்ளது. இந்த நிலை தொடரவேண்டும் என்றால் பள்ளிகள் திறப்பதை சற்று தாமதமாக்க வேண்டும். பாடத்திட்டங்கள் குறைத்திருப்பதால் பாடங்களை ஆன்லைன் வகுப்பு மூலமே கற்பிக்கப்பட வேண்டும். தமிழக அரசின் பள்ளிகள் திறப்பு முடிவை திரும்பி பெற கூறி கேட்டு கொள்கிறேன்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here