தியேட்டர்களில் அதிக பணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி!!

0
kadambur raju

திரையரங்குகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக பணம் வசூல் செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்குகளில் கேளிக்கை வரிக்கு சலுகை அளிப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் முடிவு தெரிவிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிக பணம் வசூலித்தால் நடவடிக்கை

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் திரையரங்குகளில் கேளிக்கை வரிகளுக்கு சலுகை அளிக்க கோரி திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்துவதற்கு மட்டும் தான் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகளில் அதிக பணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் சரியான கட்டணமே வசூலிக்கப்படவேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தியேட்டர்களில் கட்டண உயர்வு குறித்து இதுவரை மூன்று முறை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தக்கல் முறையில் டிக்கெட் விற்பனை செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்களிடமும், தியேட்டர் உரிமையாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பேசினார்.

முதலில் அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி போட அனுமதியளிக்க வேண்டும்’ – புதுச்சேரி முதல்வர் கடிதம்!!

தொடர்ந்து பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் எதாவது சொல்லவேண்டும் என பேசிக்கொண்டிருக்கிறார். அதிமுக இதுவரை தேர்தலில் 7 முறை வெற்றி பெறுவதற்கான காரணம் அதன் நல்லாட்சி தான். கமல்ஹாசன் புதிதாக எதையோ கண்டுபிடித்தவர் போலவும், வானத்திலிருந்து குதித்ததை போலவும் பேசுகிறார். அவரை யார் கட்சி ஆரம்பிக்க சொன்னார்? அதிமுக வை ஆட்சிசெய்ய வைத்த மக்களை அவர் பழிசொல்கிறாரா? என கேள்வி எழுப்பினார். அவரை போல கட்சி ஆரம்பித்த எத்தனையோ பேரை காணவில்லை. வரும் தேர்தல் அவருக்கு முற்று புள்ளி வைக்கும் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here