Sunday, May 5, 2024

பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

Must Read

மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பயத்தை பயன்படுத்தி “கொரோனில்” என்ற மருந்தை விற்றதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் வைத்துள்ளது.

“கொரோனில்” மருந்து:

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புக்கு மருத்துவர்கள் முதல் ஆராச்சியாளர்கள் வரை பலரும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். தந் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் பதஞ்சலி நிறுவனம் மற்றும் திவ்யா யோக மந்திர் இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்தனர்.

“தேசிய கீதம்” தந்த நாயகன் – தாகூர் மறைந்த தினம் இன்று!!

அதற்கு, ” கொரோனில் ” (Coronil) என்று பெயரும் வைத்து, கொரோனாவை இது குணப்படுத்தும் என்று கூறினார். ஆனால், இதனை இந்தியா அரசு நிராகரித்தது, இது சரியான மருந்து இல்லை என்றும் இது கொரோனவை குணப்படுத்தாது என்றும் கூறினர். இந்த வழக்கை சென்னை உயர் நீதி மன்றம் விசாரித்தது.

வழக்கில் கூறப்பட்டது:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது ” கடந்த மாதம், சென்னையைச் சேர்ந்த அருத்ரா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இடைக்கால தடையை விதித்து இருந்தோம், அவர்கள் ‘கொரோனில் -92 பி’ என்ற வர்த்தக முத்திரையை ஜூன் 1993 இல் தொழில்துறைகளில் சுத்தம் செய்வதற்கு இந்த தயாரிப்பை பயன்படுத்தினர். இந்த வர்த்தக முத்திரைகளின் உரிமையை தான் பதஞ்சலி மற்றும் திவ்ய யோக் மந்திர் அறக்கட்டளை மீறியுள்ளது.

இன்று தேசிய கைத்தறி தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!!

இந்த இரு தயாரிப்புகளும் ஒரே பெயர்களை தான் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் நேரடி மீறலில் இறங்கி உள்ளனர். கொரோனில் என்று பெயரிடுவதற்கு அவர்கள் சரியான காரணத்தை காட்டவில்லை.

ஏனென்றால், அவர்கள் கொரோனாவை தடுப்பதற்காக எந்த பொருளையும் பயன்படுத்தவில்லை என்று ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது. இப்படி பல மீறல்களை செய்துள்ளதால், அவர்கள் 10 லட்சம் ரூபாய் அபராத தொகையை கட்ட வேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -